புதுடெல்லி, பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிள்ளதாவது:- தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது. எஸ். ஜானகியின் குரல் பல தலைமுறைக்கு அன்பு, பக்தி, மகிழ்ச்சி மற்றும் ஏக்கத்தின் கீதமாக விளங்கியது. அபார நேர்த்தியுடன் பல மொழிகளில் பாடி, இசை எனும் உலகளாவிய மொழி மூலம் மக்களை ஒன்றிணைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார். புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக நேற்று காலமானார். கர்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/s-janaki-who-united-people-through-the-universal-language-of-music-rahul-gandhi-praises




