உத்தமபாளையம், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து கம்பம் அருகே சுருளி அருவியாக கொட்டும். சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக தடைவிதித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் இன்று(திங்கள்கிழமை) காலையில் இருந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-allowed-to-bathe-at-suruli-falls




