தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பும் இடையே கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது தாக்குதல் இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் குவாசம் தீவு உள்பட பல்வேறு பகுதிகளில் ஏவுகணை மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/us-strike-on-iran




