டேராடூன் உத்தராகண்டில் 8 ஆண்டுகளாக உயிரை பணயம் வைத்து பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்யும் அவலம் நடந்து வருகிறது. உத்தராகண்ட் மாநிலம், பாகேஷ்வர் மாவட்டத்தில் ராம்கங்கா என்ற ஆறு பாய்ந்து செல்கிறது. இதன் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. இதனால், ஆற்றின் மறுகரையில் பித்தோராகார் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்ல 100-க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர். அவர்கள், உயிரை பணயம் வைத்து கையால் இயக்கப்படும் தள்ளுவண்டி மூலம் கடந்து செல்கின்றனர். 8 ஆண்டுகள் அந்த பகுதி மக்கள் பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்டகாலத்திற்கு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். எனினும், 8 ஆண்டு காலம் ஆகியும் பாலம் கட்டப்படவில்லை. இந்த தள்ளுவண்டியால், 2 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் அசம்பாவிதம் நடக்கும் முன் பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்ட அறிக்கை இந்த பகுதியில் 110 மீட்டர் நீள பாலம் ஒன்றை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்ததும் பாலம் கட்டும் பணிகளை தொடங்கி விடுவோம் என்று பொதுப்பணி துறையினர் தெரிவித்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/uttarakhand-school-children-have-been-risking-their-lives-during-their-commute-for-eight-years




