மும்பை, மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக அங்கு கடந்த ஜூலை மாதத்தில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் எலி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகளும் கடு மையாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். மும்பையில் கடந்த ஜூன் மாதம் 655-ஆக இருந்த மலேரியா பாதிப்பு, ஜூலை மாதத்தில் 1,380 ஆக உயர்ந்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல், ஜூன் மாதத்தில் 266-ஆக இருந்த டெங்கு பாதிப்பு கடந்த ஜூலை மாதத்தில் 466-ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. தேங்கும் மழை நீரே இந்த கொசு உற்பத்திக்கு முக்கிய காரணம் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு இரண்டு மடங் காக அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் கொசுத் தொல்லை தாங்கமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களை சுற்றி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி யாகி வருகின்றன. குறிப்பாக மாலை நேரங்களில் கொசுக்களின் தொல்லை மிகக்கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/rise-in-malaria-and-dengue-fever-cases-in-mumbai-following-heavy-rains




