தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மது வாங்க வரிசை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கரண்குமார். இவர் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் பாண்டவர்மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது வாங்குவதற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தகராறு அப்போது, அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த கிளவிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் சுந்தர்ராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் கரண்குமாரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. கொலை மிரட்டல் இதில் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் சோ்ந்து கரண்குமாரை அவதூறாக பேசி, பலமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த கரண்குமார் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் உள்பட 2 பேர் கைது இந்த சம்பவம் குறித்து கரண்குமார் அளித்த புகாரின் பேரிலும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரிலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட சுந்தர்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-dispute-at-tasmac-shop-2-arrested




