பரமக்குடி பரமக்குடியில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற பெண் போலீஸ், தள்ளி விடப்பட்டதில் பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்தவர் கண்ணகி (வயது 35). இவருக்கு மகன், மகள் உள்ளனர். பரமக்குடியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கண்ணகி நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில், பயணிகளை ஏற்றுவது தொடர்பாக, பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு நேற்றிரவு ஆட்டோ டிரைவர்களான சதீஷ், இளங்கோ ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவர்களில் ஒருவருக்கு ஆதரவாக குமாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கருப்புராஜா (வயது 27) என்பவரும், மற்றொருவருக்கு ஆதரவாக கல்யாணசுந்தரம் (வயது 27) என்பவரும் சென்று ஒருவரை ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு இதில் கருப்புராஜாவும், கல்யாணசுந்தரமும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அந்த வளாகத்தில் வைத்து கருப்புராஜா, கல்யாணசுந்தரம் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்ததும் அங்கிருந்த பெண் போலீஸ் கண்ணகி, 2 பேரையும் தடுத்தார். அப்போது கருப்புராஜா கண்ணகியை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த கண்ணகி பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மணிவண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஒருவர் கைது இதுதொடர்பாக பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் கல்யாணசுந்தரம் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய கருப்புராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பெண் போலீஸ் கண்ணகி மரணம் குறித்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்று, பெண் போலீஸ் ஒருவர் மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/female-police-officer-killed-in-auto-driver-clash-over-passengers




