கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டி அறிவித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் இருந்து பலரும் விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்சரா ரெட்டியும் விலகியிருக்கிறார். அதிமுகவில் இருந்து விலகுவதாக அப்சரா ரெட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கனத்த இதயத்துடன், அதிமுகவில் இருந்து விலகுகிறேன். அதிமுகவுடனான எனது பயணம் வெறும் அரசியல் தொடர்பு மட்டுமல்ல. அதிமுக - அப்சரா ஜெயலலிதா மீது கொண்ட மதிப்பு, அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் அது அமைந்தது. அவரை எப்போதும் என் அரசியல் வழிகாட்டியாகவும் தலைவராகவும் கருதி வந்துள்ளேன். அதிமுகவில் இருந்து விலகும் முடிவு கோபத்தாலோ அல்லது யாரிடமும் மரியாதையின்மையாலோ எடுக்கப்பட்டதல்ல. எனது கொள்கைகளுக்கும், பொது வாழ்வில் என்னை வழிநடத்திய மதிப்புகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து ஆழமாக யோசித்து எடுத்த முடிவாகும். அதிமுகவில் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், பொறுப்புகள், நட்புகள் மற்றும் அனுபவங்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அதிமுகவுடனான என் தொடர்பையும், என்னுடன் இணைந்து பணியாற்றிய மக்களையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். எனது அரசியல் பயணம் இனி வேறு பாதையில் செல்லலாம். அப்சரா ஆனால் மக்களுக்கான சேவையில் எனது அர்ப்பணிப்பு எப்போதும் மாறாது. அம்மாவின் வழியில் தொடர்ந்து மக்களுடன் நிற்பேன். கேட்கப்பட வேண்டிய குரல்களை வெளிப்படுத்துவேன். மக்களை இணைக்கும் பாலமாக இருப்பேன். தைரியம், கருணை மற்றும் கண்ணியத்துடன் சேவை செய்வேன்" என்று தெரிவித்திருக்கிறார். TN Assembly: `கூவத்தூரில் நடந்ததைப் பற்றி இங்கே யாரும் பேசவில்லை; அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தாமாகவே' - சி.டி.ஆர் | Live முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/apsara-reddy-quits-aiadmk-political-journey-begins




