சென்னை, இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளையொட்டி, “வி தி லீடர்ஸ்” இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர். பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடியவர். தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தளர்வில்லாமல் உழைத்தவர். சமுதாயச் சிந்தனையாளர், ஊடகவியலாளர், அரசியல் தலைவர் எனப் பன்முகம் கொண்ட தலைவராக விளங்கிய ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dwettamalai-srinivasan-memorial-day-annamalai-tribute




