டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீது நொய்டாவில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தவிர போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார். டெல்லி மாணவர்கள் போராட்டம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இளைஞர்கள் தவறு செய்யும்போது பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டுமே தவிர, காவல் துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. நாட்டின் சீர்குலைந்த கட்டமைப்பு மற்றும் போலீஸ் அத்துமீறல்களால் விரக்தியடையும் இளைஞர்களின் ஆதங்கத்திற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில் மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால், அது அவர்களின் எதிர்காலத்தையும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும். அவர்கள் நம் நாட்டின் குழந்தைகள். அன்போடு அவர்களை அணுகுங்கள். அவர்களின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சீரழித்துவிடாதீர்கள். சீரழிந்த கல்வி முறை மற்றும் நிர்வாகத் தோல்வியால் தங்களுடைய எதிர்காலத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து மனமுடையும் குழந்தைகளின் நிலைக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மோடி மாணவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து வேட்டையாடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இன்று மாணவர்கள் ராஜினாமா மற்றும் கணக்குக் கேட்கிறார்கள். ஆனால், இதே நிலை நீடித்தால் நாட்டின் பெற்றோர்களும் ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து உங்களை அதிகாரத்திலிருந்தே கீழிறக்குவார்கள் நண்பரே" என்று பிரதமர் மோடியைச் சாடியிருக்கிறார். CJP: ``ரீல்ஸில் மட்டும்தான் பிரதமர் மன்னிப்பாரா?" - போராட்ட வழக்குகள் குறித்து அபிஜித் தீப்கே கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/prakash-raj-slams-narendra-modi-over-cases-against-students




