சென்னை, தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக அமைக்கப்பட உள்ள நினைவுச்சின்னத்துக்கு வருகிற 27-ந்தேதி அடிக்கல் நாட்டி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் சோக சம்பவம் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 27-ந்தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நடைபெற்று வருகிற 27-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. 31 பேருக்கு அரசு பணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், கடந்த ஜூலை 10-ந்தேதி விஜய் கரூருக்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிகளுக்கான பணி ஆணைகளை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அப்போது நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக வேலுசாமிபுரத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 27-ந்தேதி கரூர் வருகை இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் 4 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் வருகிற 26-ந்தேதி தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் விஜய், அங்கிருந்து 27-ந்தேதி கரூருக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நினைவுச்சின்னத்துக்கு அடிக்கல் கரூரில் 27-ந்தேதி உயிரிழந்த 41 பேரின் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், நினைவுச்சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரு நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் 2-வது முறையாக கரூர் வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/one-year-anniversary-of-karur-incident-chief-minister-vijay-to-lay-foundation-stone-on-27th




