புதுக்கோட்டை, வயிற்றில் இருந்த குழந்தையின் குறைப்பாட்டை கண்டறிய தவறிய தனியார் மருத்துவமனை பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறைபாடு இல்லை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மகாஸ்ரீ. கர்ப்பிணியான இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் தஞ்சையில் உள்ள ஸ்கேன் சென்டரில் மருத்துவ பரிசோதனை மற்றும் கர்ப்ப கால ஸ்கேன் செய்துள்ளார். அப்போது வயிற்றில் உள்ள குழந்தையின் வலது கை உள்ளங்கை மற்றும் கை வளர்ச்சியில் இருந்த பிறவி குறைபாடு கண்டறியப்படவில்லை. மேலும் குறிப்பிடத்தக்க பிறவி குறைபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கு இந்நிலையில் குழந்தை பிறந்த பின்னரே வலது கை முழுமையாக வளர்ச்சியடையாத பிறவி குறைபாடு இருப்பது தெரியவந்தது. இந்த குறைபாட்டை கர்ப்ப காலத்திலேயே கண்டறிய தவறிய மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர் மீது மகாஸ்ரீயின் கணவர் சரவணன் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் இழப்பீடு இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் கர்ப்பகாலத்திலேயே குறைபாட்டை கண்டறிய தவறி, மருத்துவ சேவையில் குறைபாடாக கருதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக் கில் வக்கீல் வித்யா ஆஜராகி வாதாடினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/negligence-in-medical-services-order-to-pay-rs-50-lakh-to-the-victims-family




