திருப்பதி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 35) இவருடைய மனைவி சந்தியா (வயது 30) இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் அந்த நேரத்தில் சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்த அனில் என்பவருடன் கள்ளக்தொடர்பு ஏற்பட்டது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதை சாதகமாக்கிக்கொண்ட சந்தியா கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பாராம். இந்தநிலையில் பிரசாந்த் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மனைவி வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தார். கள்ளத்தொடர்பு கள்ளத்தொடர்பை கைவிடும்படி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். ஆனால் சந்தியா கள்ளக்காதலனுடன் சந்திப்பதை தவரிக்காமல் இருந்து வந்தார். தனது கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்தார். இது குறித்து அவருடைய கள்ளக்காதலன் அனிலிடம் கூறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அனில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்ற நபரின் உதவியை நாடினார். மதுபோதை அவர்கள் திட்டமிட்டப்படி கடந்த 29-ம் தேதி பிரசாந்த் வீட்டில் இருந்தார். அப்போது வெங்கட் சாய் அவருடைய வீட்டுக்கு சென்றார். அவர் பிரசாந்துக்கு அதிக அளவு மது ஊற்றி கொடுத்தார். மது போதை தலைக்கேறியதும் பிரசாந்த் சுயநினைவு இழந்தார். உடனே சாய் பிரசாந்தை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் பிரசாந்த் படுகாயம் அடைந்தார். இதில் அவர் இறக்கவில்லை. சந்தியாவும் வெங்கடேசாயும் சேர்ந்து பிரசாந்தை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை முடிந்து பிரசாந்தை வீட்டுக்கு அழைத்து வந்தனர். உல்லாசம் உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது என அனில், சந்தியாவிடம் கூறினார். இதனையடுத்து சந்தியா தன்னுடைய கணவருக்கு மயக்க ஊசி மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் செலுத்தினார். ஊசி போட்டதும் படுக்கையில் இருந்த பிரசாந்த் துடிதுடித்தா. அப்போது சந்தியா தனது காலால் கணவர் என்று கூட பார்க்காமல் எட்டி உதைத்தார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தாய் புகார் தன்னுடைய கணவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சந்தியா உறவினர்களிடம் அழுது புலம்பினார். ஆனால் இந்த சாவில் சந்தேகம் இருப்பதாக பிரசாந்த்தின் தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்க முடியவில்லை. இதனால் கணவர் எங்களுக்கு தொந்தரவாக இருந்து வந்தார். கள்ளக்காதலன் மற்றும் வெங்கட் சாய் ஆகியோருடன் எனது கணவரை கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். போலீசார் 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/nurse-pushes-husband-off-roof-he-survives-she-then-injects-toilet-cleaner




