சென்னை, அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, வி த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கேள்வி கேட்கலாம். ஆனால். தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காலாவதியாகிப் போன அரசியல் இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-unacceptable-in-any-way-annamalai-condemns




