பெங்களூர், இந்திய சினிமாவில் பழம்பெரும் பாடகியாக திகழ்ந்தவர் எஸ்.ஜானகி. ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, இந்திய சினிமா முழுமைக்கும் அறியப்பட்ட பாடகி ஆவார். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி மைசூருவில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மைசூருவிலேயே ஜானகி வசித்து வந்தார். தனது ஒரே மகன் இறந்த துயரத்தில் இருந்த ஜானகியை உடல் நலக்கு றைவும் பற்றிக்கொண்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 88. இன்று இறுதிச்சடங்கு இதனையடுத்து மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகி யின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். பாடகி ஜானகி மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் நேற்று பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/s-janaki-dies-last-rites-to-be-conducted-with-full-state-honours




