சென்னை, பாடல், கவிதை, குட்டிக்கதையை மேற்கோள் காட்டி முதல்-அமைச்சர் விஜய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் பாராட்டி பேசினார். தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார். குட்டிக் கதை இந்த விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், குட்டிக்கதை கூறினார். ‘இன்று ஒரு கதை சொல்லி ஆரம்ப்பிக்க போகிறேன், தலைவர் அவர்களைப்போல் குட்டிக்கதை வாராது என்று கதையை கூற ஆரம்பித்தார். “அடுத்து யார் தேசத்தை ஆள போகிறார்” என்கிற போட்டியை ஒரு பெரியவர் வைத்தார். அதில் கலந்துக்கொள்ள இளைஞர்கள் வந்தனர். அந்த பெரியவர் அனைவருக்கும் விதை ஒன்று கொடுத்து, மூன்று மாதம் கழித்து இந்த விதையை நன்கு முளைக்க வைத்து வளர்த்து வரும்படி அனுப்பி வைத்துள்ளார். மூன்று மாதம் கழித்து, அந்த விதையை முளைக்க வைத்து வளர்த்து அனைவரும் கொண்டு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் அந்த விதையை அப்டியே கொண்டு வந்தார். பெரியவர் உடனே இவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவித்தார். அனைவரும் ஏன் என்று கேள்வி எழுப்பவே, நான் கொடுத்த விதை வேகவைத்தது, அது ஒருநாளும் முளைக்காது. வெற்றி அடையும் என்கிற நோக்கில் குறுக்கு வழியில் செல்லாமல் அந்த விதையை அவ்வாறே கொண்டு வந்ததால் அவரே வெற்றியாளர் என்றார். வெற்றிபெற பொய் சொல்லாமல் குறுக்கு வழியை கடைப்பிடிக்காமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்க தலைவரே (முதல் அமைச்சர் - விஜய்) சாட்சி’ என்று நிதி அமைச்சர் தனது குட்டிக்கதையை முடித்தார். கவிதை அதன்பின் தொடர்ந்து பேசிய அவர், முதல் அமைச்சர் அவர்கள் எப்பவும் எம்ஜிஆர்-ஐ மறுபதிப்பு செய்வார், அவ்வாறு அவர் ஸ்ரீபெரும்பதூரில்- அவரே சொல்லி இருப்பார். அதை இங்கே ஒரு கவிதையாக (qoute) சொல்கிறேன், உங்கள் அனுமதியோடு, என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டு பேச்சை தொடர்ந்தார். “மர்மயோகி என்ற படத்தில் எம்ஜிஆரின் பெயர் கரிகாலன், அதில் தலைவர் அழகாக சொல்லியிருப்பார். குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்கமாட்டேன்” அதை திரும்பவும் நிகழ்த்தி சாதித்து காட்டியது நமது தலைவர் தான், என்று கவிதையை முடித்தார். பாட்டு ஒரு கதை சொல்லியாச்சு, ஒரு கவிதை சொல்லியாச்சி, இன்னும் ஒரு பாட்டு மட்டும் பாடிக்கொள்கிறேன், புரட்சி தலைவர் நினைவாக எதிர்க்கட்சியை பார்த்து, என்று கூறி அந்த பாடலை பாடினார். “கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம், மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்” என்று முதல் அமைச்சர் விஜய்-ஐ கைகாட்டி பாடி முடித்தார். இந்த பாராட்டு மழையில் நனைந்த முதல்-அமைச்சர் தலையை குனிந்தவாறு சிரித்தார். அதன்பின் தொடர்ந்து பேசிய மரிய வில்சன், “எங்கள் அண்ணன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை பற்றி எம்ஜிஆர் பாடியதற்கு ரொம்ப சந்தோஷம், அப்பவே சொல்லிட்டாருனு நினைக்கிறேன்” என்று கூறி தனது உரையை முடித்தார். அப்போது தவெக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/finance-minister-maria-wilson-praised-chief-minister-vijay-by-singing-an-mgr-song




