புதுடெல்லி, நிதி தேவை 2027-28-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபர் 12-ந்தேதி தொடங்குகின்றன. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, செலவினத்துறை செயலாளர் வி.வுவல்னம் தலைமையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் முன்கூட்டிய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்கள் அக்டோபர் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டங்களில் துறைகளின் நிதி தேவை, ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான செலவு, புதிய திட்டங்களுக்கான நிதி தேவை, வருவாய் நிலவரம் மற்றும் நிலுவைத் தொகைகளை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தேவையான விவரங்களை அக்டோபர் 6-ந்தேதிக்குள் யூனியன் பட்ஜெட் தகவல் அமைப் பில் (யு.பி.ஐ.எஸ்.) பதிவு செய்ய வேண்டும். முன்கூட்டிய ஆலோசனை செப்டம்பர் 30-ந்தேதி வரையிலான செலவுகள், முந்தைய ஆண்டின் செலவுகள், நிலுவையில் உள்ள பில்கள் மற்றும் பயன்படுத்தப்படா மல் உள்ள நிதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு மதிப்பீடு களை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெறும் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும், அதன்பிறகே புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாயில் வசூலிக்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், அரசு சேவைகளுக்கான கட்ட ணங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும் அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டிய ஆலோசனைகளுக்குப் பிறகு துறைகளுக்கான தற்காலிக செலவின வரம்புகள் நிர்ணயிக்கப்படும். நிதிப்பற்றாக்குறை பின்னர் அரசின் செலவின முன்னுரிமைகள் மற்றும் வருவாய் நிலவரத்தை கருத்தில் கொண்டு இறுதி வரம்புகள் நிர்ணயிக்கப்படும். இந்தப் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2027-ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் முடிவடையும். 2026-27-ம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2027-28-ம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/union-budget-preparation-work-begins-on-october-12




