சென்னை, தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட பழமையான 6 சிலைகளை மீட்டு, தமிழகத்துக்கு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த 6 சிலைகளில், 3 சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அந்த சிலைகளை தமிழகத்துக்கு திருப்பி ஒப்படைக்க, ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கைலாசநாதர் கோவில் அந்த சிலைகளில் ஒன்று திரிசூலபத்திரகாளி அம்மன் சிலை ஆகும். அந்த சிலை திருவாரூர் மாவட்டம், கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலை சேர்ந்தது. சுப்பிரமணிய சாமி சிலை இன்னொரு சிலை, நந்தி சிலையாகும். இதுவும் அதே கோவிலை சேர்ந்தது. 3-வது சிலை ஆறு தலைகள் கொண்ட சுப்பிரமணிய சாமி சிலையாகும். இந்த சிலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் இருக்கும், நாகநாதசாமி கோவிலுக்கு சொந்தமானதாகும். பிரதமர் நரேந்திரமோடி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடியிடம் இந்த 3 சிலைகளையும், ஆஸ்திரேலிய அரசு ஒப்படைக்கிறது. பின்னர் அந்த சிலைகள், மத்திய அரசு உதவியோடு டெல்லி கொண்டுவரப்படும். அங்கிருந்து சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழகத்துக்கு கொண்டுவந்து, சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைப்பார்கள். இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/three-smuggled-ancient-idols-arrive-in-tamil-nadu-from-australia




