சென்னை, செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் ஹிருது ஹாருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் புதிய படம் ‘பேமிலி படம்’ திரைப்படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்ததாக ‘டெக்ஸாஸ் டைகர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹிருது ஹாருண் கதாநாயகனாக நடித்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணி தாசன், சம்யுக்தா ஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைக்க, விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னையை சுற்றி நடைபெற்ற படப்பிடிப்பு ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள் இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘டைகரியன்ஸ்ரோர்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான புரோமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் இடம்பெற்றுள்ளார். இதனால் பாடல் வெளியீட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-first-single-promo-of-the-film-texas-tiger-is-released




