சென்னை, தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளில் சமத்துவ சமுதாயம் உருவாக்கிட வேண்டும் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- சமூகநீதி போராளி தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்று கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி. விடுதலை இல்லை “எந்த சொல் உன்மீது இழிச்சொல்லாக சுமத்தப்படுகிறதோ, அந்த சொல்லை நீ எழுச்சி சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்! வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்று கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை. சமூக சீர்திருத்தவாதி லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு குரல்கொடுத்த போராளி. சாதிய கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூக சீர்திருத்தவாதி. அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர். புகழ் வணக்கம் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவ சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தை செலுத்துவோம்! ஆதித்தமிழர் எழுச்சி நாளில்’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-extol-the-great-renown-of-grandfather-rettaimalai-srinivasan-seeman




