கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். மீசைய முறுக்கு இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஹர்ஷத் கான், ``2017-ல் 'மீசைய முறுக்கு' முதல் பாகம் வெளியானபோது, அது கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கையையும் காதலையும் மிகச் சரியாகப் பிரதிபலித்த படமாக அமைந்தது. இப்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இது அவசர அவசரமாக லாபத்திற்காக எடுக்கப்பட்ட கதையல்ல. இந்த 9 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களைச் சேகரித்து ஆதி அண்ணன் உருவாக்கியுள்ள திரைக்கதை இது. இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கிய விஷயங்களைத் தைரியமாகப் பேசியுள்ளார். ஸ்டுடியோவில் ஆதி அண்ணனைச் சந்தித்தபோதே அவரது அசாத்தியமான ஆற்றலையும் பாசிட்டிவ் வைப்பையும் பார்த்து வியந்தேன். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சித் தொடருக்காக, நானும் ஆதி அண்ணனும் பச்சை இலை தழைகளை டிரஸாகப் போட்டுக்கொண்டு நடித்தோம். வெயிலிலும் அந்தச் சூழலிலும் நாங்கள் ஆடைக்காகப்பட்ட பாடும், அதன் பின்னணியில் நடந்த நிகழ்வுகளும் தியேட்டரில் ரசிகர்களைப் பெருமளவில் சிரிக்க வைக்கும் என நம்புகிறேன். இத்திரைப்படம் ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இசையை மையமாகக் கொண்ட ஒரு கொண்டாட்டமாக இருக்கும். மீசைய முறுக்கு படத்தில் சுமார் 12 முதல் 13 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு பாட்டு எனப் படம் முழுவதுமே இசை அலைவரிசையில்தான் பயணிக்கிறது. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு உணர்வுகளையும், இளைஞர்களைக் கவரும் வேகத்தையும் கொண்டது. குறிப்பாக இதன் கிளைமாக்ஸ் பாடல் அனைவருக்குள்ளும் ஒரு புதிய வெறியையும் நம்பிக்கையையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பாபா பாஸ்கர் மாஸ்டரின் நடனம், சைத்ரா மற்றும் ரம்யா ஆகியோரின் பங்களிப்பு என ஒட்டுமொத்தப் படக்குழுவின் உழைப்பு மிகப் பெரியது. 'மீசையமுறுக்கு 2' திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து ஆதரவளிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். ``சுந்தர்.சி அண்ணாவை ஹீரோவா வச்சு படம் பண்ணனும்னு ஆசை" - ஹிப் ஹாப் தமிழா ஆதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/actor-harshat-khan-talk-about-meesayai-murukku-2-at-press-meet



