சென்னை, கன்னியாகுமரியை, கனிம சுரங்கத்திற்காக அழிப்பதா? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கன்னியாகுமரியை, கனிம சுரங்கத்திற்காக அழிப்பதா? செப்டம்பர் 26 இல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! அணுக்கனிம சுரங்க திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இந்திய அரிய மண் நிறுவனம் மேற்கொள்ள முனையும் அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. 1,144.0618 ஹெக்டேர் பரப்பளவிலான இந்த திட்டத்தில் மோனசைட் உள்ளிட்ட கனிமங்களை அகழ்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டப்பகுதியில் கணிசமான அளவு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஆய்வு கடற்கரை சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான நீண்டகால தாக்கங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மக்களின் கருத்து குறிப்பாக, இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையில் பொது விசாரணையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய அரிய மண் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையே குறிப்பிடுகிறது. மக்கள் வாழ்வுடன் நேரடியாக தொடர்புடைய இத்தகைய திட்டத்தில் அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நடவடிக்கை என்ன? மேலும், திட்டத்துக்கான நில ஒதுக்கீட்டு காலம் 2027 ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். கன்னியாகுமரியின் இயற்கை வளத்தை பாதுகாப்பது என்பது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வுரிமை தொடர்பான பிரச்சினையாகும். திட்டத்தை கைவிட வேண்டும் எனவே, இந்திய அரிய மண் நிறுவனம் அணுக்கனிம சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும், கடலோர சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த சுயாதீன ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 26 ஆம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கன்னியாகுமரியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் முத்தமிழன் தி. வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இயற்கை வளம் கன்னியாகுமரியின் இயற்கை வளத்தையும், கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். கன்னியாகுமரியைப் பாதுகாப்போம்! இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்! மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-kanyakumari-being-destroyed-for-mineral-mining-velmurugan-asks




