தவெக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்னையான விவசாயிகளின் பயிர்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஒரு சில கடன் தள்ளுபடி மட்டுமே செய்திருக்கிறார்கள். பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன் முழு கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. நீர் மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை. முதலில் தமிழ்நாட்டின் நதிகளை இணைப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும் எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை. வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. TN Budget 2026: சைக்கிள் டு லேப்டாப்; பள்ளி, உயர்கல்வித்துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன? வேலை இல்லை, வேலை இல்லை என்று மக்கள் சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தொழிற்சாலைகள் அமைப்பது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் கடன் இருக்கிறது. இந்தக் கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன திட்டங்கள் இருக்கிறது என்று அறிவிக்கவில்லை. பல லட்சம் கோடிகள் இன்று கடனாக மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம். TN Budget 2026 பட்ஜெட்டில் பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் நகர்புற மேம்பாட்டிற்காக கூவம் நதியை சுத்தம் செய்வது சாலைகளை மேம்படுத்துவது, எலெக்ட்ரானிக் பேருந்துகள் போன்ற சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஆனால் இதெல்லாம் இன்று சொல்லாக இருந்தது. செயல் வடிவமாக வரும்போது தேமுதிக அதனை நிச்சயம் வரவேற்கும்" என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/premalatha-vijaykanth-about-tn-budget-2026




