சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியண் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் கண்டனம் இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா? இது என்ன மனநிலை எதிர்க்கட்சியினர், திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரை இழிவுபடுத்திப் பேசிய திமுகவினர், இப்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்குச் செல்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை. மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுக-வினர் மறக்கக் கூடாது. இனியாவது மேடைகள் உங்கள் வீடுகள் அல்ல என்பதை உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து, அரசியல் நாகரீகத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-rs-bharathis-remark-that-voters-who-did-not-vote-for-the-dmk-will-not-have-a-good-death




