சென்னை, நடிகை நிமிஷா சஜயன் ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ என்ற திரைப்படத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்த அனுபவம் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். 14 கிலோ எடை அதிகரிப்பு தனது கதாபாத்திரத்திற்காக சுமார் 14 கிலோ எடையை அதிகரித்ததாக நிமிஷா சஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியதாவது: “இந்த கதாபாத்திரத்திற்காக சுமார் 14 கிலோ எடையை அதிகரித்தேன். 58 கிலோவில் இருந்து 72 கிலோ வரை எடை அதிகரித்தது. அதன்பிறகு மீண்டும் எடையைக் குறைப்பதற்காக நான் மேற்கொண்ட பயணம் மிகவும் கடினமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். என்னால் இனி முடியாது மேலும், ‘எடையைக் குறைக்கும் பயணத்தின் முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. பல நேரங்களில் ‘என்னால் இனி முடியாது’ என்று உண்மையாகவே உணர்ந்தேன். பல நாட்களில் என் பயிற்சியாளர் முன்பு உட்கார்ந்து, ‘என்னால் இதற்கு மேல் முடியாது’ என்று அழுது புலம்பியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பயிற்சியாளருக்கு நன்றி இந்த கடினமான பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது பயிற்சியாளருக்கு நிமிஷா சஜயன் நன்றி தெரிவித்துள்ளார். “நீங்கள் மட்டும் இல்லையென்றால், நான் நிச்சயமாக இந்த முயற்சியைக் கைவிட்டிருப்பேன். இந்த முழுப் பயணத்திலும் நீங்கள் எனக்கு ஒரு தூணாக இருந்தீர்கள். இந்தப் பயணம் பொறுமை, முயற்சியை நம்புவது மற்றும் மிக முக்கியமாக, சரியான நபர் நம் அருகில் இருப்பது பற்றியது என்பதை உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் அம்பிகா பண்டிட் இயக்கியுள்ள‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ படம் தற்போது அமேசான் பிரைமில் உள்ளது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-who-gained-14-kg-the-struggle-to-lose-it-again-nimisha-sajayan-opens-up-emotionally



