சென்னை, ரூ.2 ஆயிரத்துக்கு மேலான யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க உள்ளதன் எதிரொலியாக ஏ.டி.எம்.களில் போதுமான அளவுக்கு பணம் இருப்பு வைக்க வங்கிகளுக்கு, நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவை உத்தரவிட்டுள்ளன. பரிவர்த்தனைக்கு கட்டணம் யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தனிநபர் தரப்பில் இருந்து வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு டிஜிட்டல் முறைக்கு பெரும்பாலானவர்கள் மாறிவிட்டனர். இந்த சூழலில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. யு.பி.ஐ. பரிவர்த்தனை மூலமாக கடைகளில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் கூடுதல் கட்டணம் செலுத்துவதை விட பணத்தை ரொக்கமாகவே எடுத்து பயன்படுத்தலாம் என்ற மனநிலைக்கு நிறையபேர் வந்துவிட்டனர். இது ஏ.டி.எம். மையங்களில் தற்காலிகமாக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பணம் இருப்பு வைக்க. இதனை கருத்தில் கொண்டு, ஏ.டி.எம். எந்திரங்களில் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் போதுமான அளவுக்கு பணம் இருப்பு வைக்குமாறு வங்கிகளுக்கு நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளன. மேலும் இதற்காக தயார்படுத்திக்கொண்டு, ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 57 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.களில் பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகின்றன. யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படுவதால் அதிகமானோர் பணத்தை ரொக்கமாக எடுக்க விரும்புவார்கள். கடைசி நேரத்தில் ஏற்படும் தட்டுப்பாடு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே ஏ.டி.எம்.களில் போதுமான அளவுக்கு பணம் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/banks-ordered-to-stock-sufficient-cash-in-atms




