Articolo completo
புதிய தீர்மானத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் கடந்த வெள்ளி கிழமையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தில் தற்போது ' புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' எனத் திருத்தப்பட்டுள்ளது. மேகதாது அணை தீர்மானத்தில் முதல்வர் விஜய் திருத்தத்தை சேர்த்தது அவை மீறிய செயலாகும் என்று எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டமன்றம்: இணைந்தும், இணையாமலும் வெளிநடப்பு செய்த அதிமுக; உள்ளே வேலுமணி- வெளியே எடப்பாடி இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதிமுக வெளிநடப்பு உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழக்கமிட்டிருக்கிறார். இதில் குறிப்பான விஷயம் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிநடப்பு செய்திருக்கும் நிலையில் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்நாதன், பழனி தொகுதி எம்.எல்.ஏ கே.ரவி மனோகரன், சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வெளிநடப்பு சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். பின்னர், 'அவையில் பேச அனுமதிக்கவில்லை' என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி வாதம்! எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை தீர்மானம் பற்றி உரிமை மீறல் பிரச்னை எழுப்பி பேசக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆவேசமாக கூச்சலிட்டு சபாநாயகருடன் வாதம். திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு சம்பந்தமாக அவையில் அமளி! சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், 110 விதியின் கீழ் திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் பேச எழுந்த நிலையில், மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி அதிமுகவினர் உரிமை மீறல் தீர்மானம் எடுக்கக் கோரி அவையில் கூச்சலிட்டு அமளி செய்து வருகின்றனர். இன்று சட்டப்பேரவை! இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இரண்டாவது நாளாக, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று உரையாற்ற உள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இந்த Live Blog-ல் தெரிந்துகொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto



