வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 'கொஞ்சம் நில்லுங்க.'-நமக்கு முன்னாடி செல்பவர்களை நோக்கி சொல்லும் வார்த்தைகள். நாம் அவர்களிடம் எதையாவது தெரிந்து கொள்ள/சொல்ல வேண்டியவற்றை நேரடியாக தெரிவிக்க பயன்படுத்துகிறோம். இது அடுத்தவர்களை நோக்கி பயன்படுத்தும் வார்த்தைகளா. இல்லை நமக்கும் தானா. பட்டிமன்றத் தலைப்பு போல் இருக்கிறதா. வாருங்கள் பார்ப்போம். உண்மையில் நாணயத்தின் இருபக்கம் போலத்தான் இந்த தலைப்பும். முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கும் போது நம் உள்ளே இருந்து 'கொஞ்சம் நில்லுங்க' என்று உள்ளுணர்வு சொல்லும். மற்றவர்களுக்கு இதை பயன்படுத்தும் போது இடத்திற்கு தகுந்தார் போல சொல்லப்படும் விஷயங்கள் மாறும். 'கொஞ்சம் நில்லுங்க' நாம் விரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இடையே வரும் ஒரு விளம்பரம் போன்றது. அந்த விளம்பரமும் நமக்கான செய்திகளை சில சமயம் கொண்டு வரும். 'கொஞ்சம் நில்லுங்க' என்பது பல சம்பவங்களின் தொகுப்பு. ஒன்றுக்கு ஒன்று எந்த சம்பந்தமும் இருக்காது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று 'கொஞ்சம் நில்லுங்க' என்னைப் பாருங்க என்று ஈர்க்கும். அப்படி ஈர்ப்பது. பூக்களை சுற்றி சுற்றி பறக்கும் பட்டாம் பூச்சியாக இருக்கலாம். கீச் கீச் என்று கத்தும் பறவைகள் குரல்களாக இருக்கலாம். காலியாக இருக்கும் பக்கத்து வீட்டுக்கு குடி வந்திருக்கும் புதியவர்களாக, விநாயகர் கோயில் அர்ச்சகர் வீட்டில் இருந்து வரும் பில்டர் காபி மணம்.இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எதுவும் என்னை ஈர்க்கவில்லை என்று சொன்னால் நீங்கள் சாதாரண நிலையில் இல்லை என்று அர்த்தம். அப்படி இருந்தால் கொஞ்சம் நில்லுங்க.உங்களை சரி செஞ்சு இயல்பு நிலைக்கு வாங்க. இளைஞராக இருந்தால் தினசரி செல்லும் சாலையில் உங்கள் கவனத்தை ஈர்ப்புது ஒரு கம்பெனியின் விளம்பரம், புதிதாக திறக்கப்பட இருக்கும் கட்டிடங்கள், நீண்ட காலமாக இருக்கும் பொதுத்துறை வங்கி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் இன்சூரன்ஸ் அலுவலகம்.ஒன்று அல்லது பல வகையாக இருக்கலாம். மனசுக்குள் ஆழமாக செல்லும் ஒன்று அந்த அலுவலகத்திற்கு பணி புரிய தேர்ந்தெடுத்து உங்களை அங்கு அழைத்துக் கொண்டு போகும்.ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் வந்தால் போட்டி அதிகமாகுமே என்று கேட்பவர்கள் உண்டு. ஆயிரம் பேர் வந்தாலும் நான் ஜெயிப்பேன் என்று நம்புபவர்கள் வெற்றி பெறுவார்கள். உண்மைச் சம்பவங்கள்: சம்பவம் 1: உண்மை சம்பவம் ஒன்றை சொல்கிறேன். கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் எனக்கு நன்கு அறிமுகமானவர், தன் இரு பையன்களுடன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சுத்தம் செய்யும் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு பொதுத்துறை வங்கி ஒன்று இருந்தது. இந்த வங்கியில் நாம் வேலை பார்க்க வேண்டும் என்று தினம் தினம் உறுதி கொண்டு இருந்தார். காலம் கனிந்தது தற்போது அதே வங்கியில் இன்று நிரந்தர பணியாளராக (SUB-STAFF) தஞ்சாவூரில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கியில் பணியாற்றி வருகிறார். சம்பவம் 2: 'கொஞ்சம் நில்லுங்க' என்று சொல்லி ஔவையார் ஒரு போரை நிறுத்திய நிகழ்வு புறநானூறில் இடம்பெற்றுள்ளது. அதியமான் மற்றும் தொண்டைமான் என்ற இரு மன்னர்கள் இடையே போர் நிகழும் சூழல் இருந்தது. இதை அறிந்த ஔவையார் தொண்டமானை நேரில் சென்று சந்திக்கிறார். அவன் தனது போர்க்கருவிகளை ஔவையாரிடம் காட்டுகிறான். அவைகள் புத்தம் புதிதாக இருக்கின்றன. அதியமானின் போர் கருவிகள் முனை முறிந்து பழுது பார்க்கப் படுகின்றன என்று இரண்டையும் ஒப்பிட்டு ஏளனமாக அதன் உள்ளார்ந்த அர்த்தம் தொண்டைமானுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்தார் ஔவையார். நடக்க இருந்த போரை தடுத்து நிறுத்தினார். காதலின் மொழி: காதலிலும் இந்த வார்தைகள் இடம்பெறும். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ என்று மக்கள் திலகத்தின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கண்ணதாசன் எழுதியிருப்பார்.'நில்லுங்கள் நீங்கள் மழை மேகங்களே கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல்.சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை என்னைப் போல் போராடும் மன்னன் காதில்." -சாதனை திரைப்படத்தில் இடம்பெற்ற கவிஞர் வாலி எழுதிய 'எங்கே நான் காண்பேன் என் காதலன்' பாடலின் இடையே வரும் வரிகள் 'கொஞ்சம் நில்லுங்க' என்று மேகங்களையும் நிற்கச் சொல்லி காதலின் வலியை இருவரும் கேட்க வைத்தார்கள். காலத்தின் மாற்றம்: 'கொஞ்சம் நில்லுங்க' என்று நம்மை காலம் காலமாக சில நேரம் நிறுத்தி வைக்கும் ரயில்வே கேட்கள் உண்டு. அங்கே, கரி எஞ்சின், டீசல் எஞ்சின், மின்சார எஞ்சின், DEMU மற்றும் MEMU வரை அடுத்த பல முன்னேற்றங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதே தண்டவாளங்கள் தான் ஆனால் 'வந்தே பாரத்' போல புதிது புதிதாக மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதே 24 x 7 (24 மணி நேரம் 7 நாட்கள் தான்)தான் புதிதாக மாறுங்கள் என்று நம்மை நிற்க வைத்து கற்றுக் கொடுக்கிறது புதிதாக மாறி இருக்கும் அந்த கேட்கள். சாதனைகளும் வயது தடையில்லை: கொஞ்சம் நில்லுங்க பாஸ்.எனது அதிரடி ஆட்டத்தை பாருங்க என்று அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் சூர்யவன்ஷி. கிரிக்கெட்டில் இந்தியா ஏ அணியில் தற்போது விளையாடி இருக்கிறார். இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி 29 பந்துகளில் 94 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் கேப் வெர்டே நாட்டின் கோல்கீப்பர் 40 வயதான வோ சின்ஹா 7 கோல்களை தடுத்து.போட்டியை டிரா செய்து தடுத்தாட்கொண்டவரானார். ஒருவர் மிக மிக இளம் வயது. இன்னொருவர் நடுத்தர வயது. சாதனை புரிய வயது தடையில்லை இருவரும் கவனத்துக்குரியவர்களானார்கள். உயிர்க்கு ஆபத்தை விளைவித்த சம்பவங்கள் மனதை விட்டு அகலாமல் ஒரு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். அதிலும் நின்று நிதானித்து அதிலிருந்து வெளிவந்து சாதனை படைத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த மாணவி ஜெனிபர் அவர்கள் இன்று TNPSC GROUP 1 தேர்வில் வெற்றி பெற்று துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இயற்கையின் அழகியல்: 'பனி பொழியும் மாலையில் காட்டில் ஒரு நிறுத்தம்' (STOPPING BY WOODS ON A SNOWY EVENING) என்ற ஆங்கிலக் கவிதையில் 'ராபர்ட் ஃப்ராஸ்ட்' காட்டில் பனி பொழிவதை பார்க்க நிற்கும் ஒரு பயணியின் இயற்கை மற்றும் சமூகப் பார்வையை சொல்கிறார். அதில் வரும் "THE WOODS ARE LOVELY DARK AND DEEP.BUT I HAVE PROMISES TO KEEP.AND MILES TO GO BEFORE I SLEEP. என்ற வரிகளை பல இடங்களில் பயன்படுத்துவார்கள். இயற்கையின் அழகை ரசிக்க கொடைக்கானல் ஊட்டி, மூணார் செல்கிறோம். எதற்காக.மனம் லேசாக மாற வேண்டும் என்பதற்காகவே. 'கொஞ்சம் நில்லுங்க' - பார்க்க சாதாரண பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகள் போல் இருக்கும். அதற்குள் இன்னொரு உலகம் இருக்கிறது. 'கொஞ்சம் நில்லுங்க.அதைப் பாருங்க.ஒவ்வொன்றிலும் நமக்கான ஒன்று இருக்கும். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம். நடந்துகொண்டிருக்கலாம். நடக்கலாம். அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/literature/finding-hidden-signs-melodies-and-everyday-miracles-around-us




