சென்னை, சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;- “சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் அதிகம் பேசுவதில்லை என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்தார்கள். ஆனால் முதல்-அமைச்சர் விஜய் தனது பதிலுரையில் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள். அடுக்கு மொழியில் பேசி மக்களை ஈர்த்த காலம் எல்லாம் போய்விட்டது. தமிழில் அடுக்கு மொழியில் பிரமாதமாக பேசினார்கள் என்பதற்காக ஓட்டு போட்ட காலமெல்லாம் இருந்தது. இனி அந்த மாதிரி எதுவும் இல்லை. யாரால் உண்மையாக நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/great-thinkers-do-not-speak-much-speaker-jcdprabhakar




