மதுரை, கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அந்த கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாகசாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்படுகின்றன. இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி, சித்தி விநாயகர் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து பூஜைக்கு சுவாமியிடம் அனுமதி பெறுதல், கஜபூஜை, கோ பூஜை, தனபூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெறும். 7 புண்ணிய நதி. இந்தநிலையில் கும்பாபிஷேக யாகசாலைக்கு தேவையான ஹோம பொருட்கள் தற்போது கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதில் கோவிலில் உள்ள 514 சுவாமிகளுக்கு தேவையான சிறிய, பெரிய பித்தளை கலசங்கள் வந்துள்ளன. அதில், நூல் சுற்றும் பணியில் பட்டர்கள் ஈடுபட்டனர். இதுதவிர கலசத்தில் நீர் நிரப்புவதற்காக காசியில் புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர் வந்துள்ளது. அதேபோன்று 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர 9 வகையான தானியங்கள், மூலிகை பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் என 96 வகையான ஹோம பொருட்கள் மூடை, மூடையாக அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர யாக சாலையில் பட்டர்கள் அமருவதற்கு தேவையான மரப்பலகைகள் மற்றும் தேவையான பொருட்களும் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/consecration-rituals-for-the-madurai-meenakshi-amman-temple-begin-today




