திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 17-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடக்கிறது. அன்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆனிவார ஆஸ்தானம் 'ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண புண் ணிய காலம்' என்றும் கூறப்படுகிறது. வருகிற தட்சிணாயண புண்ணிய காலம் கடக லக்னத்தில் பிறக்கிறது. தமிழ் ஆனி மாதம் கடைசி நாளில் அதாவது வருகிற 17-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது. ஆனிவார ஆஸ்தானத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பழைய வரவு- செலவு கணக்கை முடித்து, புதிய வரவு-செலவு கணக்கு தொடங் கப்படுகிறது. அன்று திருமலையில் உள்ள பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் வெள்ளித்தட்டுகளில் 6 பட்டு வஸ்திரங்களை வைத்து தலை யில் சுமந்தவாறு மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் பிரகாரத்தை வலம் வந்து மூலவர் ஏழுமலையானிடம் சமர்ப்பிப்பார்கள். பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் அப்போது பிரதான அர்ச்சகர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது. அதில் 4 பட்டு வஸ்திரங்களை மூலவர் ஏழுமலையானுக்கும். ஒரு பட்டு வஸ்திரம் உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொரு பட்டு வஸ்திரம் விஸ்வசேனருக் கும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. பிரதான அர்ச்சகர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது. அதில் 4 பட்டு வஸ்திரம் மூலவர் ஏழுமலையானுக்கும், ஒரு பட்டு வஸ்திரம் உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொரு பட்டு வஸ்திரம் விஸ்வசேனருக்கும் அணி வித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் கோவிலின் தங்க வாசலில் கண்டா மண்டபத்தில் 17-ந்தேதி காலை 7 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை அலங்காரம் செய்து சர்வ பூபால வாகனத்தில் அமர செய்து கருடாழ்வாரை நோக்கி வைக்கப் படுவர். அதேபோல் தங்கத் திருச்சி வாகனத்தில் பெருமாளின் சேனாதிப தியான விஸ்வக்சேனரை அலங்காரம் செய்து தெற்கு நோக்கி எழுந்தருள செய்வர். சாவி கொத்து உற்சவர்களுக்கும், ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி உள்ள மூலவருக் கும் சிறப்புப்பூஜைகள், நைவேத்தியங்கள் நடத்தப்படுகிறது. அப்போது அர்ச்சகர்கள் கோவிலின் தங்க வாசலில் ஒரு தங்கத்தட்டில் சிறிதளவு அரிசியை பரப்பி அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து “நித்ய ஐஸ் வர்யோ பவ” என கூறி மூலவர் ஏழுமலையானை பிரார்த்தனை செய்வார்கள். அப்போது பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படும். அந்தக் காணிக்கைகள் மூலவர் பாதத்தில் சமர்ப்பணம் செய்யப்படும். பின்னர் அந்தக் காணிக்கையை எடுத்து பிரதான உண்டியலில் செலுத்தி புதிய வரவு- செலவு கணக்கை தொடங்குகிறார்கள். அடுத்ததாக ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி ஆகியோரின் வலது கையில் கோவிலின் சாவியை கொடுப்பார்கள். அப்போது ஆரத்தி, சந்த னம், தீர்த்தம், சடாரி ஆகிய மரியாதைகள் செய்வார்கள். சாவி கொத்தை வாங்கி மூலவரின் பாதத்தில் வைத்து விடுவார்கள். பிறகு சாவியை எடுத்து மூலவர் சன்னதியின் கதவை மூடுவதும், திறப்பதுமான நடவடிக் கையை மேற்கொள்வார்கள். புஷ்ப பல்லக்கு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் மாலை 6 மணியளவில் உற்ச வர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை பல வண்ணமலர் களாலும், தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களாலும் அலங்கரித்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அத்துடன் ஆனி வார ஆஸ்தா னம் நிறைவடைகிறது. கோவிலில் நடக்கும் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ள தாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/anivara-asthanam-at-tirupati-temple-procession-of-lord-malayappa-swamy-in-a-floral-palanquin




