மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர். "பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் NEET வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! மஹாராஷ்டிரா லாத்தூர் மருத்துவமனையில் ₹5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டு, தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23) Samsung Fold7 போனில் 132 கேள்விகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கசிந்துள்ளன. நீட்ட்ரம்ப் சொன்னது போல், ஈரான் மீது 'சக்திவாய்ந்த தாக்குதல்' நடத்தும் அமெரிக்கா; என்ன நடக்கிறது? மேலும் ₹30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு கேரளா முதல் ராஜஸ்தான் வரை WhatsApp வழியே பரவியுள்ளது என CBI அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. பிரதமர் மோடி அவர்களும், மஹாராஷ்டிர முதலமைச்சரும் தேவேந்திர பட்னாவிஸும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இதையெல்லாம் மறைக்க நேற்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட "ஹேக்-ப்ரூஃப்/ஆண்டி-பேப்பர் லீக்" சட்டமும், சிறப்பு நீதிமன்றங்கள், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹10 கோடி அபராதம் போன்ற காகித அறிவிப்புகளும் வெறும் கண் துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை! வினாத்தாள் கசிவைத் தடுக்கத் துப்பில்லாத பாஜக அரசு கொண்டு வரும் இந்த போலி சட்டங்களால் ஒரு பயனும் இல்லை! கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மௌனம் காப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் NEET வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! மஹாராஷ்டிரா லாத்தூர் மருத்துவமனையில் ₹5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டு, தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23) Samsung Fold7 போனில் 132… — Manickam Tagore.Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) July 30, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/manickam-tagore-questions-bjp-over-neet-2026-paper-leak




