சிவகங்கை, சிவகங்கை அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 9 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர். விபத்து சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிப்பேருந்தில் வருவது வழக்கம். இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு சிவகங்கை - மேலூர் நெடுஞ்சாலையில் கோமாளிபட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சிவகங்கையில் இருந்து மேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளிப்பேருந்து மீது பயங்கரமாக மோதியது. ஓட்டுநர் உயிரிழப்பு- மாணவர்கள் காயம் இந்த விபத்தின் தாக்கத்தில் பள்ளி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இதில், பேருந்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் புல்லுகோட்டை பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 5 மற்றும் 6-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி பெண் உதவியாளர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதி மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். அவர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-accident-involving-lorry-and-school-bus-driver-dies




