திருவனந்தபுரம், கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் பள்ளிக்கரை கட்டம்பள்ளியில் உள்ள கூட்டக்கனியை சேர்ந்த சந்திரன்-ரீனா தம்பதியரின் மகள் அனுஸ்ரீ (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் அங்கேயே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் கண்ணூர் மாவட்டம் அம்பலத்தட்டு ஆண்டியன் வீடு பகுதியை சேர்ந்த சுதாகரன் - அனிதா தம்பதியரின் மகன் அமல் (26) என்பவருக்கும் திருமணம். நிச்சயிக்கப்பட்டது. அமல், எர்ணாகுளத்தில் உள்ள வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவர்களது திருமணம் டிசம்பர் மதம் 26-ந் தேதி நடைபெற இருந்தது. திருமணம் அமல் நிச்சயிக்கப்பட்டதால் மற்றும் அனுஸ்ரீ அடிக்கடி போனில் பேசி வந்தனர். அவர்கள். இருவரும் வார இறுதி நாளான தங்கள் வீட்டுக்கு வந்து விட்டு. ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை பார்க்கும் இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சூழலில் நேற்று ஹன்சூரில் தான் தங்கியிருந்த வீட்டில் அனுஸ்ரீ பிணமாக கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனுஸ்ரீ தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அமல், எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் அறையில் பிணமாக கிடப்பதாக தகவல் வந்துள்ளது. அவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அமலின் நண்பர் ஷயோன் கூறுகையில், சில தனிப்பட்ட சிக்கல்களால் அமல் மன உளைச்சலில் இருந்தார் என்றார்.திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரும் தற்கொலை செய்தது ஏன்? என்பது மர்ம மாக உள்ளது. உறவினர்கள் இருவரும் எதற்காக திடீரென தற்கொலை செய்து கொண்டனர் என்று குழப்பமடைந்து கண்ணீர் வடித்து வருகின்றனர். வாழ வேண்டியவர்கள் இப்படி போய்விட்டார்களே என கூறி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து - ஹன்சூர் மற்றும் எர்ணாகுளம் டவுன் வடக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனுஸ்ரீயின் தங்கை ஸ்ரீலட்சுமி, கேரள காவல்துறையில் பயிற்சிப் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/it-is-noteworthy-that-anusrees-younger-sister-srilakshmi-is-a-trainee-in-the-kerala-police




