சென்னை, தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது. விவாகரத்து வழக்கின் பின்னணி விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன. சமரச முயற்சிக்கு பிறகு திருப்பம் பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சில நடைமுறை கேள்விகளை எழுப்பியதுடன், இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sangeetha-withdrew-the-divorce-case




