சென்னை, ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப் போட்டி பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப் போட்டி (Sailing) பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணன் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/chief-minister-vijay-congratulates-sportswoman-from-tamil-nadu




