சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வட்டார துணை ஆணையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டார துணை ஆணையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இன்று (21.09.2026) வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட சூரப்பட்டு சாலை மற்றும் புழல், காந்தி சாலையில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், புழல் ஏரி மற்றும் உபரி நீர் வெளியேறும் பகுதி, கே.எஸ். நகர் 13-வது தெருவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட அண்ணாநகர் 2-வது மற்றும் 5-வது சாலை சந்திப்பு பகுதி, 1-வது மற்றும் 3-வது அவென்யூ சாலையின் குறுக்கே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி, செனாய் நகர் பகுதியில் மழைநீர் வடிகாலில் இருந்து வண்டல்கள் அகற்றும் பணி, அப்பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட வீடு, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பாடி, சரவணா ஸ்டோர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் வண்டல்கள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர் பகுதியில் தூய்மைப் பணிகள், மழைநீர் தேங்குவது குறித்தும், சைதாப்பேட்டை, ஶ்ரீநகர் காலனியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திடவும், அன்றாட தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள், களப் பணியாளர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-prevention-measures-in-chennai-inspected-by-zonal-deputy-commissioners




