திருநெல்வேலி, திருநெல்வேலி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 24½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வாகன தணிக்கை திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுக்கன்குறிச்சி அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய போலீசார், அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நரசிங்கநல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 26), சிறுக்கன்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிராஜ் (24) மற்றும் முருகேசன் (42) என்பது தெரியவந்தது. 24½ கிலோ புகையிலை பறிமுதல் இதை தொடர்ந்து ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடிய 24½ கிலோ புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சீதபற்பநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சபிதா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் 24½ கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திய சிறையில் அடைப்பு இதனை தொடர்ந்து, வெங்கடேஷ், இசக்கிராஜ், முருகேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட்டு உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/24-5-kg-banned-tobacco-seized-in-tirunelveli-3-arrested




