புதுடெல்லி, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கானா நாட்டைச் சேர்ந்த சினாபு இசா 8.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இந்தநிலையில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்த்துகள் மகளிர் குண்டு எறிதல் F57 பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று, இந்த சீசனின் சிறந்த தூரத்தைப்பதிவு செய்த ஷர்மிளாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த சாதனையின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பாரா தடகளத்தில் இந்தியா 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. எதிர்காலப் போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/pm-modi-congratulates-sharmila-on-winning-gold-at-commonwealth-games




