பெங்களூரு, உள்ளாடைகள் திருட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் முதல் தளம் பெண்களுக்கும், 2-ம் தளம் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் கடந்த 3 மாதங்களாக 25 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே தங்கும் விடுதியில் 2-ம் தளத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிரிராஜ் என்பவரும் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். மேலும் கிரிராஜ், நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 24-ந் தேதி முதல் தளத்தில் வசிக்கும் இளம் பெண் அவரது தோழியுடன் அறையை பூட்டாமல் வெளியில் சென்றிருந்தார். இந்த நேரத்தில் அவரது அறைக்குள் புகுந்த கிரிராஜ், இளம்பெண்ணின் உள்ளாடைகள் மற்றும் சானிட்டரி நாப்கின் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் மறுநாளும் இதே போன்று உள்ளாடைகளை திருடி இருந்தார். போலீசில் புகார் உள்ளாடைகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சிய டைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கோரமங்களா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சோதனை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கிரிராஜ் அடிக்கடி அந்த இளம் பெண்ணின் அறைக்குள் வந்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் 2-ம் தளத்தில் இருந்த கிரிராஜை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் இளம்பெண்ணின் உள் ளாடைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் கிரிராஜ் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்தபோது. அங்கு பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்களை போலீசார் பார்த்தனர். இதையடுத்து போலீசார் கிரிராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/jewelry-shop-employee-arrested-for-stealing-womens-undergarments-and-sanitary-napkins




