கிருஷ்ணகிரி, ஓசூர் ஜுஜுவாடி போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3,36,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கிருஷ்ணகிரி பிரிவு அலுவலர்கள் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து இன்று ஜுஜுவாடி போக்குவரத்து சோதனை சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமதியிடம், கணக்கில் வராத பணம் ரூ.1,52,800, அலுவலகத்தில் தனிநபரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூ.50,000, மோட்டார் வாகன ஆய்வாளர் மகாலட்சுமியிடம் கணக்கில் வராத பணம் ரூ.50,000 கைப்பற்றப்பட்டது. மேலும் மோட்டார் வாகன ஆய்வாளரின் அலுவலக அறையில் உள்ள கணினி மேஜையில் கணக்கில் வராத பணம் ரூ.83,400 இருந்தது. ஆகமொத்தம் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3,36,200 கைப்பற்றப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-transport-checkpost-krishnagiri




