நியூயார்க், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வீறுநடை போடும் அர்ஜென்டினா 7-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டியி ருக்கிறது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி பதிலடி அளித்த பேட்டியில், 'கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் உலகின் சிறந்த அணியாக விளங்கி வருகிறோம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் உண்மை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. மீண்டும் ஒரு முறை உலகின் டாப்-2 அணிகளில் ஒன்றாக எங்களை நிலைநிறுத்தியிருக்கிறோம். நாங்கள் செய்தது எல்லாம் தற்செயலாகவோ அல்லது அதிர்ஷ்டத்தாலோ நிகழ்ந்தது கிடையாது. எதுவும் எங்களுக்கு எளிதாக கிட்டிவிடவில்லை. உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப்போட்டியை எட்டுவது அரிதான விஷயம். அதை நாங் கள் சாதித்து காட்டியிருக்கிறோம். இங்கிலாந்திடம் தோற்றிருந்தால் அர்த்தமற்ற விமர்சனங் களை முன் வைத்திருப்பார்கள். அந்த வாய்ப்பை நாங்கள் வழங்கவில்லை' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/we-are-the-best-team-in-the-world-messi




