திப்ருகர், அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் நேற்று யானைக்கூட்டம் ஒன்று ரெயில் தண்டவாளத்தை கடந்ததை வனத்துறையினர் கவனித்து, அந்த வழியாக வந்த அதிவேக ரெயில் ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தூரத்திலேயே நிறுத்தப்பட்டதால் யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்தன. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த தகவலை தெரிவித்தார். யானைகள் ' செல்லும் ரெயில் வழித்தடங்களில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். யானை வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட மறுநாள் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரெயில்மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/ரெயில்-வரும்போது-தண்டவாளத்தை-கடந்த-யானைகள்-வனத்துறையினரால்-அசம்பாவிதம்-தவிர்ப்பு-elephants-crossed-the-tracks-as-a-train-approached-forest-department-officials-averted-a-mishap



