கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பொருட்காட்சியை காண வந்திருந்தனர். அவர்கள் வாவுபலி திடலில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்களில் ஏறி உற்சாகமாக பொழுதை களித்துக் கொண்டிருந்தனர். 10 அடி உயரத்தில் 6 பெட்டிகள் கொண்ட டிராகன் ரெயிலில் பொதுமக்கள் ஏறி உற்சமாக பயணம் செய்தனர். ஒரு பெட்டியில் 3 முதல் 4 பேர் வரை அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு கீழே சரிந்து விழுந்தன. அதில் பய ணம் செய்த 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கீழே விழுந்து காயம் அடைந்த னர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் பொருட்காட்சி மூடப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dragon-rail-derails-at-exhibition-7-injured




