கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் நபா நடேஷ், தற்போது 'ஸ்வயம்பு' படத்தில் நடித்து முடித்துள்ளார். புதிய படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் நபா நடேஷ் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது. "கன்னட, தெலுங்கு சினிமாவில் நடித்தாலும் தமிழ், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். உரிய காலம் அமைந்தால் அது நடக்கும் என்று நினைக்கிறேன். நீங்க சாதுவா இருக்கீங்க. ரொம்ப பயந்த சுபாவம் கொண்டவரா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளார்கள். நான் பார்ப்பதற்கு அப்படி இருக்கலாம். ஆனால் எனக்கு இன்னொரு முகமும் உண்டு. அன்புக்கு அன்பு, வம்புக்கு வம்பு. அதுதான் நான்" என்று நபா நடேஷ் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/love-for-love-fight-for-fight-that-is-me-nabha-natesh




