ப்ரையா, கேப் வெர்டே நாட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடு கேப் வெர்டே. இந்நாட்டின் பகொ தீவில் ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் ஆம்னி பஸ்சில் பள்ளிக்குழந்தைகள், சிறுவர்கள் என 32 பேர் சுற்றுலா சென்றனர். 25 பேர் பலி மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/cape-verde-bus-plunge-accident-25-killed




