நகோயா, ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஈரானை வீழ்த்தியது. ஆசிய விளையாட்டு 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஈரானை வீழ்த்திய இந்தியா இந்த நிலையில், பெண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி ஈரானை இன்று எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணி, ஈரானை 37-23 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணிக்கு தொடர்ந்து 2-வது வெற்றி கிடைத்துள்ளது. இந்திய பெண்கள் அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) ஜப்பானை எதிர்கொள்கிறது. ஸ்கீட் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் அணிப் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அனந்த்ஜீத் சிங் நருகா, மைராஜ் அகமது கான், பவதேக் சிங் கில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 346 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தியா மற்றும் கஜகஸ்தான் அணிகள் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்ததால், 3-வது இடத்தைத் தீர்மானிக்க ‘ஷூட்-ஆப்’ நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் அனந்த்ஜீத் இதற்கிடையே, அனந்த்ஜீத் சிங் நருகா தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு ஆண்களுக்கான ஸ்கீட் தனிநபர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த இறுதிப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-2026-india-womens-kabaddi-team-beats-iran-37-23




