ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவர்களுக்கு இன்று 41-வது திருமண நாள். JCD Prabhakar - Grace Jayanthi அதையொட்டி, கிரேஸ் ஜெயந்தியின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி, அவரை நினைவுகூர்ந்திருக்கிறார் ஜே.சி.டி. பிரபாகர். 41-வது திருமண நாளையொட்டி அவருடைய மனைவி குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "41 ஆண்டுகள்… ஒரு திருமண வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமல்ல; என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் பயணிக்கும் அன்பின் நினைவுகள். கண்ணின் இமை போல என்னைக் காத்து, அன்பிலும் அக்கறையிலும், ஆலோசனைகளிலும், வழிகாட்டுதலிலும் என்னை அரவணைத்த என் வாழ்க்கைத் துணையை, இந்த 41-ஆம் திருமண நாளில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் நினைவுகூர்கிறேன். என் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் சோதனைகளிலும் என்னுடன் நின்ற அந்த அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம். காலம் கடந்தாலும் சில உறவுகள் மறைவதில்லை. அவை நினைவுகளாக மட்டும் இல்லாமல், நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வாழ்கின்றன. இன்று அவர் என்னுடன் இல்லை. ஆனால், அவர் தந்த அன்பும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் இருக்கின்றன. 41 ஆண்டுகள் கடந்தாலும், உன்னை நினைக்கும் அன்பும் நன்றியும் என்றும் மாறாது. என்றும் என் நெஞ்சில்…" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/governance/jcd-prabhakar-remembers-late-wife-grace-jayanthi-41st-wedding-anniversary



