சென்னை, மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே மீண்டும் சிறைபிடித்து விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சிறைபிடிப்பு ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து கடலுக்குச் சென்ற மத்தியாஸ் (22), மோபிஸ் (21), அபிஸ்டன் (27), ஆண்டனி புரூட்ஸ் (42), எபிஸ்டன் (29), ஸ்டீவன்சன் (22), ஜான் ஜேசன் (24), ஆண்டனி பிரதீப் (26), சுபார்தன் (24) ஆகிய நமது 9 மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே மீண்டும் சிறைபிடித்து விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கண்டனம் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைப் பற்றி வாய் திறக்காமல் மத்திய பாஜக அரசும் பிரதமர் மோடியும் வேடிக்கை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சர்வதேச கடல் எல்லை விவகாரத்தைக் காரணம் காட்டி இலங்கை கடற்படை நடத்தும் இந்தத் தொடர் அராஜகத்தைத் தடுத்து நிறுத்த மோடி அரசு துளியும் துணிவின்றி மௌனம் காப்பது ஏன். சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 ராமேஸ்வர மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் உடனடியாக மீட்க மத்திய அரசு தூதரக ரீதியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டுப் பேச்சுவார்த்தைகள் மூலம் நமது மீனவர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது; இனியும் வெறும் விளம்பர வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, நமது மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு நிரந்தரத் தீர்வை உடனே காண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-re-captured-manickam-thakur-condemns-the-central-government




