தனது அப்பா, அம்மாவின் வீட்டு பத்திரத்தைதான் அடமானம் வைத்து “அன்பில் அவன்” படம் எடுத்ததாக அசோக் செல்வன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வன் அசோக் செல்வன் தற்போது ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இப்படம் அசோக் செல்வனின் 23-வது படமாகும். இப்படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன் தயாரித்துள்ளார். ரொமான்ஸ் கலந்த ஆக்ஷன் ‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லரின் இறுதியில் அசோக் செல்வன் மலையின் 70 அடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் நீரில் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்தக் காட்சியைப் படமாக்கிய விதம் பற்றி ஒரு படக்குழு வெளியிட்ட வீடியோ வைரலானது. படத்தின் முன்னோட்ட விழா இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது. விழாவில் அசோக் செல்வன் “முதலில் நான் என் அப்பா, அம்மாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய காரணங்கள் இருக்கிறது. முக்கியமான காரணம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் பைனான்ஸ் அதிகமாகி கொண்டே சென்றது. அப்போது அப்பா, அம்மாவின் வீட்டு பத்திரத்தைதான் அடமானம் வைத்தேன். ஒரு படத்தில் என் பெயர் இருந்தால் அந்த படத்தில் என்னுடைய கடுமையான உழைப்பு இருக்கும். அது என்னோட பிராமிஸ். ‘அன்பில் அவன்’ படம் ரொம்ப ஸ்பெஷலான படம். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்” என்றார். விழாவில் நடிகர்கள் கவுதம்ராம் கார்த்திக், ஹரீஷ் கல்யாண், இயக்குனர்கள் விக்னேஷ் கார்த்திக், அஸ்வத் மாரிமுத்து, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-mortgaged-my-house-and-made-the-film-anbil-avan-ashok-selvan




